"சிய்யான் சொன்ன கதை"!.
●●●●●●●●●●●●●●●●●●●●●●
இது பரவலாக ஒரு காலத்தில் ரேடியோ, டிவி , பத்திரிகைகள் ஏதும் இல்லாத காலத்தில் கர்ணபரம்பரையாக சிய்யான்களாலும் (தாத்தா ) தன் காதிலுள்ள பாம்படம் ஆட்டி சிலாகித்து கதை சொல்லும் கிழவிகளாலும் பாலர்களுக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால் இந்த கதை கள்ளர் வாழ்வு குறித்த விரிவான தரவுகளைப்பதிவுசெய்திருக்கும் ஆங்கிலேய ஆய்வாளர்களான டர்ன்புள், எம்.ஜே.முல்லாளி, எட்கர்தர்ஸ்டன் மற்றும் பிரமலைக்கள்ளர்களைப்பற்றிய விரிவான மானுடவியல் ஆவணமொன்றை உருவாக்கிய( எ சௌத் இண்டியன் சப் கேஸ்ட். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி). லூயிஸ் டுமாண்டிடம் காணப்படவில்லை. கதை இப்படி போகிறது. ...
மதுரைக்கு துலுக்கர் வந்த காலமது.
"நம்ம பயக நாகமலைக்கு மேற்கேயும், யானைமலைக்கு வடக்கேயும், ஓரு துலுக்கனையும் போகவிடாம தூக்கிப்போட்டு அடிக்கிறாங்க. ..மதுரையில இருக்க துலுக்கமாரு ஆட்சியதிகாரிக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. அப்ப அதிகாரத்துல இருந்த மாலிக்காபூர் வேற வழியில்லாம நாகமலையில ஒரு சைன்னியத்தோட வந்து கள்ளநாட்டுக்கு பேச வரச்சொல்லி சேதி அனுப்புறான். மூணுநாள் கழிச்சு நாட்டுல இருந்து ஒரு பெரியாம்பள அங்க வந்து சேர்றாப்ல . மாலிக்காபூர் கிழவனப்பாத்து சிரிச்சு; ஏய்யா பேச்சுவார்த்தைக்கு வாங்கன்னு சொல்லி அனுப்புனா மூணு நாளா யாரையும் காணோம். கடைசியில ஒரு வயசாலியான ஒன்னப்போய் அனுப்பி இருக்காய்ங்க, என்ன .. என்னயப்பாத்து பயந்துட்டாய்ங்களா? என்றானாம். அதோட இல்லாம மேற்கொண்டு மாலிக்காபூர், ஒத்தையாளா வந்திருக்கிறயே நீதான் தலைவன்னா ஒன்னயக் கொன்னுபுட்டா உன் கூட்டம் என்னவாகும்னு 'சொல்லி சிரிச்சானாம். பதிலுக்கு கிழவனும் சிரிச்சானாம். என்ன சிரிக்கிற எனக்கேட்க வயசாலி சொன்னாப்பலயாம்; அது வேற ஒண்ணுமில்லப்பா. ஒன் சேதி வந்ததும் நான் போவேன் நீ போவேன்னு ஒரேகலகமாகிப்போச்சு. வேற வழியில்லாம ஊரு கூடி "திருஉளச்சீட்டு" போட்டாய்ங்க. அதில எம்பேர் வந்திச்சு. அம்புட்டுதேன். அங்க யாரும் தொண்டனுமில்ல. தலைவனுமில்ல . என்னயக்கொன்னயின்னா இன்னும் பல ஆயிரம் பேர் வருவாய்ங்க ' என்றானாம். இதைக்கேட்ட மாலிக்காபூர் ஏதுடா வம்பாப்போச்சு என நினைச்சு சமாதானமாப் போயிருவம்னு சொல்லி இறங்கி வந்துட்டானாம். அதுக்கு அடையாளமா ஒருத்தரை ஒருத்தர் 'சிய்யா'ன்னு கூப்பிட்டுக்கிறது. கள்ளவீட்டு பயகளுக்கு 'கவுருகடப்பு' பண்ணுரதுன்னும். (சுன்னத் ) .அவக வீட்டு பொம்பள புள்ளைக கருகமணி மாலை போட்டுக்கிர்றதுன்னும் முடிவாச்சாம்."....
ஒரு மானுடவியல் ஆய்வாளனின் பார்வையில் பிரமலைக்கள்ளர் எனும் பழங்குடி சமூகத்தின் அடையாளத்தை உணர்த்துகிறது இந்த கதை.
இந்த வழக்கத்திற்கு ஆதாரமாக திரு. சேத்தூர் ஜமீன்தார் திருவொண்ணாத துரை அவர்கள் தந்த குறிப்பும் உதவுகிறது. அது...
... "1750 களில் மதுரையை கூறு போட்டுக்கொண்ட மபூஸ்கான் என்ற மத வெறியனின் படையில் இணைக்கப்பட்ட நத்தம் கள்ளர் வீர்ர்களுக்கு கட்டாய சுன்னத் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வினால் தான் மறவர் பாளைய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டு பூலித்தேவர் ஒருபுறமும் மற்ற சில மறவர் பாளையங்கள் கான்சாகிப் உடனும் இணைந்து பாளையக்கார்ர் போராட்டமே முடிவுக்கு வந்தது.
சுன்னத் செய்யும் பழக்கத்தை கேலி செய்து எனது முன்னோர் ஒருவர் தேவதானம் பெரிய கோவில் நுழைவாயிலில் கேலிச்சின்னம் ஒன்றை செதுக்கியே வைத்திருக்கிறார்.
மேலும் பண்டைய காலத்தில் போருக்கு சென்ற சில போர்க்குடிகள் முழுநிர்வாணமாக போருக்கு செல்லும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது. அவர்களை மோப்ப நாய்கள் வாசம் பிடிக்காமல் இருக்க சுன்னத் செய்யும் பழக்கம் இருந்தது"....
நன்றி : திரு. எம்.ஏ. துரை, அண்ணன் அவர்களுக்கு.
No comments:
Post a Comment