உண்மையான க்ஷத்திரியர்கள்
♤☆♤☆♤☆♤☆♤☆♤☆♤☆♤☆♤☆♤
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
என வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்த குடி, மறக்குடி . அதனால்தான் பகர வாளெடுத்தான், வெற்றி மாலையிட்டான், வாள்கோட்டை ராயன், அதிர வெட்டும் பெருமாள், பரியேறும் பெருமாள், பதினெட்டு வன்னியரை முதுவு புறங்கண்டான், மறவர்மறவன், தென்னவன் மறவன், இடையணிசோழன் மறவன், சேதுக்கு வாய்த்தான், ஆபத்து காத்தான், அடைக்கலங்காத்தான், மானங்காத்தான், என பலவாறாக முக்குலத்து மறவர்கள் போற்றப்படுகின்றனர். புகழப்படுகின்றனர். அவர்களின் தூய வீரத்திற்கும், வலிய வாழ்வுக்கும், வாளின் வன்மைக்கும், அணி செய்யும் விதமாக ஒரு கல்வெட்டு மறவரின் மங்காத புகழை ஒளிவீசிச்சொல்கிறது. ....
அக்கல்வெட்டு இதோ உங்களின் பார்வைக்கு! .........
இந்த கல்வெட்டு சொல்லும் செய்தியென்ன? அதைச்சிறிது ஆய்வு செய்வோம். ...
விபரம் இதுதான். ...,
........வயகலனாடு புல்வயலில் இருக்கும் மறவரில் முதலாவது (அதாவது குடும்பத்தில் பெரியவன் பாட்டன் ) "பகர வாளெடுத்த (பிளக்கும் வாள்) மாலையிடான் அம்பலக்காரன் " பவுத்திரன் (புத்திரன்-மகன் ) " வெத்தி வாளெடுத்த (வெற்றி வாளெடுத்த ) வென்று மாலையிடான் பெரிய வெள்ளையத்தேவன் அம்பலக்காரன் தென்காஞ்சி பாளையத்தில் படவன்( பட்டவன்-இறந்தவன்) க்ஷ (மேற்படி ஆளுக்கு மகன் ) மகன் பூசை மாலையிடான் அம்பலக்காரன் போறத்துக்கோட்டையில் பட்டவன், அவனுடைய மகன் ஒலகப்ப மாலையிடான் அம்பலக்காரன் கீளாநெல்லி (கீழாநிலை பாளையம் ) பாளையத்தில் பட்டவன் க்ஷ (மேற்படி ஆளுக்கு மகன் ) மகன் பளணியான்றி (பழனியாண்டி ) மாலையிடான் மற்றும் அவனுடைய மகன் துரைசாமி மாலையிடான் பன்னி வச்ச .......
இப்படி வாழையடி வாழையாக போர்க்களத்தில் சண்டையிட்டு ஒரே குடும்பத்தில் பல தலைமுறையாக போர் புரிந்து உயிர் விட்டிருக்கின்றனர். இவர்களுக்கு அம்மன்னர்கள் காணியாக நிலம் நீர் வழங்கி மிராசுதார் அந்தஸ்தை தந்துள்ளனர். இதைத்தான் இந்த கல்வெட்டு சொல்கிறது . இது ஒரு முக்கியமான கல்வெட்டு ஆகும். மறவர்களே சத்திரியர்கள் என்ற அந்தஸ்தை இக்கல்வெட்டின் வரிகள் தருகின்றன. ஏனெனில் பிழைப்புக்கு சண்டையிட்டு மடிந்து போன கூட்டமல்ல ,...போர்க்களமே வாழ்வாக வாழ்ந்து புகழெய்திய புண்ணிய புருஷர்கள் மறவர்களே !..என்பது இக்கல்வெட்டின் மூலம் மிகவும் தெள்ளத் தெளிவாக தெரியும். எவரும் இதை மறுக்கமுடியாது. இப்படியெல்லாம் சுத்தவீரர்குடிகளாக வாழ்ந்து மறைந்த மறவர்களே உண்மையில் க்ஷத்திரியர்கள் என்ற அந்தஸ்தை பெற்றவர்கள். இதுவல்லாத மற்றவர்கள் வெறுமனே பேச்சுக்கு தம்மை க்ஷத்திரியர்கள் என்பது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையேயாம் என்பது வெள்ளிடைமலை.
மறவரான பழுவேட்டரையர் கல்வெட்டு !
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1 … சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது
2 …து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ
3 …மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள்
4 …பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா
5 …ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர்
6 …போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந்
7 …கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி 8 …கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ....
இன்றுவரை வாழும் அந்த மிராசுதார் குடும்பத்தினருக்கு இந்த பதிவைக் காணிக்கையாக்குகிறேன். ஆனந்த கண்ணீரோடு!
வாழ்க முக்குலத்து மறவர்கள்! வளர்க அவர்கள் புகழ்! போற்றட்டும் இவ்வுலகம் மறவர்களின் வாள்வன்மையையும், தோள் வலியையும்!
_____________♧♧♧_____________
ஹஹஹஹ
ReplyDeleteபடவன் என்றால் பட்டவன் அல்ல
படவன் சிவன்படவன்
செம்படவன்
படவன் =பரவர்