கள்ளர் எனும் கடவுள்!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!
அழகர் என்பவர் கடவுளோ, கடவுளின் அவதாரமாகவோ எண்ணப்பட்ட அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மையாக இருக்கவேண்டும்! பண்டைய பாண்டிய அரசர்களால் தொடந்து ஆதரிக்கப்பட்ட கள்ளர்கள், பின்னாளைய இஸ்லாமிய, நாயக்கர் ஆட்சியாளர்களால், அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தொடர்ந்து தடுக்கப்பட்டும் வாழத்தலைப்பட்டனர்.
அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளர் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.
திப்பு சுல்தான் கூட திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன.
இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
பிறமலைக் கள்ளர்களின்
சித்திரைத் திருவிழாவுக்கும், அழகர் ஆற்றில் இறங்குவதற்கும் இன்றுள்ள-படியான மத ரீதியான தொடர்பு ஏதுமில்லை. சொல்லப்போனால் இவ்விரண்டும், வெவ்வேறானவை. முரண்பட்டவை.
சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி சொக்க நாதர் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பண்டைய நாள்களில் இந்த விழாவிற்கு பக்கத்து நாட்டு மன்னர்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்கள், திவான்கள், சிற்றரசர்கள் என பெருந்தனக்காரர்கள் கூடுவார்கள். இன்று போல அன்று சாலைகள், அவற்றைக் கடக்கும் பாலங்கள், விரைவாகச் செல்ல வாகனங்கள் இல்லாத காலம். பெரும்பாலும் இவர்கள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளிலும், மாடு பூட்டிய கூண்டு வண்டிகளிலும், ஆட்கள் தூக்கும் பல்லக்குகளிலும் பயணம் செய்வர்.
பழைய மதுரை;
"""""""""""""""""""""""
அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின.
வடபகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் இன்றைய ஆழ்வார்புரத்திற்கு வந்து ஆற்றைக் கடந்துதான் மதுரைக்குச் செல்லவேண்டும். இதைப் பயன்படுத்தி கள்ளர் படை ஆற்றுக்குள் இறங்கி தக்க தருணம் பார்த்து பயணிகளின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.
மீனாட்சிசொக்கன் திருக்கல்யாணத்திற்கு வருகின்ற வடுகர்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் செய்வது கள்ளர்களின் திட்டமும் வழக்கமும் ஆகும்.
கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் தம் கூட்டாளிகள் துணையுடன் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்த புதர்களில் மறைந்திருந்து இத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளான்.பின்னர் கவர்ந்தசெல்வங்களுடன் வண்டியூர் சென்று தனது ஆசைநாயகியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவன் வழக்கமாயின! இதே போன்ற சில நடைமுறைகள் ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலிலும் உள்ளதையும் பார்க்கலாம். இவர்கள் நாரணப்பேரரசு வழி வந்த மக்கள் என்பதற்கும் வலுவான சான்றுகள் உள்ளன.
அழகர் மலைக் கள்ளர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவன் அழகரின் பின் தோன்றல் ஆவான். இந்த கள்ளர் படையின் எதிர்ப்புகள் மதுரை நாயக்கர்களுக்கு பாண்டிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது.
பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை."வரி" என்ற சொல்லே கள்ளர்களின் தன்னரசு நாடுகளின் வரலாற்றில் அன்று பின்னாளைய ஆட்சியாளர்களால் உபயோகிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் கள்ளர்களிடம் அடங்கி ஒடுங்கித்தான் போனார்கள் என்றே சொல்லவேண்டும்! .
கள்ளர் வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் திருமலை நாயக்கரே என்றால் அது மிகையாகாது!. கள்ளர்களை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயம் நாயக்கர்களுக்கு இருந்தது.அதனால் அவர்களுக்கு பலவித நன்மைகளையும் சலுகைகளையும் வழங்கத்தொடங்கினர்.இதன் விளைவாக அதன்பின் கள்ளர்கள் சித்திரைத் திருவிழாவின்போது தாக்குதல் நடத்துவது தடுக்கப்பட்டது. அரசருக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருப்பது; அதே நேரத்தில் மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து கள்ளர் தாமே சுயமாக ஆள்வது என அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளர்களின் தலைவர் அடக்கமான அழகர் மலையில் கோயில் எழுப்பி மன்னர் அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார். இதற்கு கள்ளழகர் பூண்டு வரும் கள்ளர்களின் ஆடையாபரணங்களோடு கையில் வளரியும் ஏந்தி குதிரையேறி வரும் அழகே சாட்சியாக இன்றும் உள்ளது. அழகர் கோயிலில் என்றைக்குமே ஆலயத்தின் முதல் மரியாதையை அப்பகுதியில் பின்னாளைய வெள்ளியங்குன்றம் ஜமீனால் கூட சுயமாக அனுபவிக்க இயலவில்லை. அவர்கள் அதை மேலூர் கள்ளர்களிடம் பங்கு போட்டே செய்ய வேண்டி வந்தது.
கள்ளழகர் தோற்றத்தை விளக்கும் பரிபாடல் குறிப்பு!
☆•☆•☆•☆•☆•☆•☆•☆
கள்ளணி பசுந்துளவினவை( கள்ளரணியான கருந்துளசி மாலை அணிந்தவன் )
கருங்குன்று அனையவை(கருங்குன்றம் போன்றவன்)
ஒள்ளொளியவை(ஒளிக்கு ஒளியானவன்)
ஒரு குழையவை(ஒரு காதில் குழை அணிந்தவன்)
புள்ளணி பொலங்கொடியவை (பொலிவுறும் கருடக்கொடி உடையவன்)
வள்ளணி வளைநாஞ்சிலவை(மேலும் கீழும் வளைந்திருக்கும் வளரி கொண்டவன்)
சலம்புரி தண்டு ஏந்தினவை(சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்)
வலம்புரி வய நேமியவை(சங்கும், சக்கரமும் கொண்டவன்)
வரிசிலை வய அம்பினவை(வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்)
புகர் இணர் சூழ் வட்டத்தவை(புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்)
புகர் வாளவை(புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்)
என பரிபாடலிலேயே கள்ளழகர் எனவும் அவர்களுக்குரிய மாலை ,வளரி, வில் , வாள் என பலவற்றையும் கொண்டு காட்சி அளிப்பதாக பாடல் உள்ளது. பரிபாடலின் காலத்தை சொல்லவும் வேண்டுமோ?
வாழ்க! முக்குலத்து கள்ளர்! வளர்க அவர்தம் புகழ்!
-×-------×-------×------×------×-----×-
No comments:
Post a Comment