பாடிகாவலும் அரையர்களும்!
=×=×÷×=×÷×=×÷×=×÷×=×÷×=×÷×=
அரையர் என்ற சொல் அரைசர் என்ற சொல்லின் திரிபாகும். ஆரம்பகாலத்தில் முடிசூடிய மன்னர்கள் அரைசர் (அரசர்) என்று அழைக்கப்பட்டனர்.பின்னர் காலப்போக்கில் குறுநிலத்தலைவர்கள், படைநிர்வாகிகள் போன்றவர்கள் அரசர் என்ற பொருளில் அரையர் என அழைக்கபட்டனர்.
காவல் பணி செய்வதற்கு நல்ல உடற்கட்டு, துணிவு, போர்க்குணம், திறமை ஆகியவை அவசியம் தேவை. அத்தகைய தகுதி உடையவர்களே காவல்பணியைத் திறம்பட செய்ய முடியும். மேற்சொன்ன தகுதிகள் அரையர்களிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்ததின் காரணமாக அரையர்கள் காவல் பணி செய்வதற்கு உரியவர்களானார்கள். திருமயம் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இரண்டு... "இந்நாட்டு காப்பரான அரையகளோமும் "... என்றும் ,"இந்நாடு காப்பரான அரையகளோமும் ".. என்று குறிப்பிடுகின்றன. குளத்தூர் வட்டம் குன்றாண்டார் கோயில் கல்வெட்டு ஒன்று. .."இரண்டுமலை நாட்டு அரையகளோமும் எங்களில் இசைந்து பிடிபாடு பண்ணிக் குடுத்த பரிசாவது நாங்கள் பகைகொண்டு எய்யுமிடத்து எங்கள் காவலான ஊர்களில்".. என்ற குறிப்புகள் அரையர்கள் காவல்பணி செய்ததைத் தெரிவிப்பதாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கிலும் மேற்கிலும் மறவர்கள் பெரும்பாண்மையினராக பழங்காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டைக்கு வடக்கிலும் கிழக்கிலும் கள்ளர்கள் பெருந்தொகையினராக பண்டைகாலம் முதல் வாழ்ந்து வரும் பெருமக்களாவர். இவர்கள் மறவரை விட அதிகத்தொகையினராக அப்பகுதியில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விரு மரபினரும் போர்க்குணம் மிக்கவர்கள். எதற்குமே அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவர்கள்.ஆகையால் இவர்கள் காவற்பணி மேற்கொண்டதில் வியப்பொன்றுமில்லை. மறவர்கள் பிற்காலச் சோழ பாண்டியர்களது காலத்திலேயே அரையர்கள் என அழைக்கப்பட்டதை பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பாடிகாவல் (பாடி-நாடு) பெற்ற ஊர்களான ... ராங்கியம், செவலூர், பொன்னமராவதி, கோவனூர், பனையூர், குளமங்கலம், புல்வயல் முதலான ஊர்களில் மறவர்கள் பெரும்பாண்மையினராக வாழ்வதும், அந்தந்த ஊரார்களின் பெயர்களில் இவர்கள் பாடிகாவலில் ஈடுபட்டதும் கல்வெட்டுகளால் அறியக்கிடக்கின்ற உண்மையாகும்.
கள்ளர்கள் பெரும்பான்மையினராக. .வீசங்கநாடு, வீரக்குடிநாடு, சிறுவாயில்நாடு, தென்மலைநாடு, வடமலைநாடு, வல்லநாடு, முதலான பெயர்களுள்ள நாடுகளில் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களை அரையர்கள் என சொல்லிக்கொள்கின்றனர். கள்ளர்களில் அழிம்பில் (அம்பு) நாட்டுக்கள்ளர்கள் தங்களை "ஐந்து வீட்டு அரையர்" எனச்சொல்வர். அழிம்பில் ஈஸ்வரன் கோயிலில் உள்ள 13 வது நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்றில். ...."அஞ்சுகுடி அரையர்களோம் "... என்ற தொடர் காணப்படுகிறது. இத்தொடர் 'ஐந்து வீட்டு அரையர்கள்' என்ற அம்பநாட்டுக் கள்ளர்களையே குறிக்கும்.
ஆலங்குடி வட்டத்திலுள்ள வல்லநாட்டைச்சேர்ந்த பூவரசக்குடி, மறக்குலக்கள்ளர்கள் நிறைந்த ஊராகும். திருவரங்குளம் ஹவதீர்த்தேஸ்வரர் கோயிலிலுள்ள கி.பி.13 ம் நூற்றாண்டு கல்வெட்டொன்று ....."பூவரசக்குடி அரைய மக்களில் சூரியத் தொண்டைமானும்" .... என்ற தொடரைத்தருகிறது. பூவரசக்குடி அரைய மக்களில் சூரியத் தொண்டைமானார் என்ற வாசகம் கள்ளர்களுக்கே உரியதாகும். தொண்டைமான் என்ற பெயர் வழக்கு புதுக்கோட்டை பகுதியில் கள்ளர்களைக்குறிக்கும் (சில இடங்களில் மறவர்கள் )என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையின் வடக்கு கிழக்கில் பாடிகாவல் பெற்ற ஊர்கள் கள்ளர்கள் வாழும் ஊர்களாக இருப்பதும் கள்ளர்கள் இங்கு பாடிகாவல் பணியில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவனவாகும்.
வாழ்க முக்குலத்து ராயர்கள்! ...
வளர்க அவர்தம் மானமும் வீரமும்! !
------÷-----÷------÷-----÷-----÷-------
Monday, March 20, 2017
அரையர்களின் ஆளுமை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment