VANATHIRAYAN
Thursday, December 10, 2020
Monday, January 1, 2018
'பசி' தீர்த்த குஞ்சரத்தம்மாள் .
பதிவு : முனைவர் குமரவேல்
நம் அனைவருக்கும் -
தேனி குஞ்சரம்மாள் தெரியும் - நடிகை - ஆனால்,
மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?
தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் -
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது -
கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது -
பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது -
அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது -
குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி -
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி -
பெரும் செல்வச் செழிப்பு -
மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது -
வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான் -
தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள் -
கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து -
வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது -
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-
இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர் -
அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது -
ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர் -
அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர் -
ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை -
தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது -
அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர் -
தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது -
ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள் -
தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம் -
நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.
நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது -
ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது -
பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு -
எல்லாவற்றையும் எரித்தது -
அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள் -
கல் பதித்த தங்க நகைகள் -
வெள்ளி நகைகள் -
முத்துக்கள் - காசு மாலை - மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.
தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.
தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது -
அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான் -
யாரைப் பற்றிப் பேச -
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள் -
அவள் முகம் மலர்ந்திருந்தது -
தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள் -
ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு -
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் -
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.
சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி -
கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது -
கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் -
என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார் -
நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். -
அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் -
எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது -
அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது -
சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர் -
மாமதுரை மக்கள் -
Tuesday, August 15, 2017
நத்தக்கோட்டை படுகொலை!
நத்தக்கோட்டை படுகொலை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திய மண்ணில் வெள்ளையர் நடத்திய முதல் படுகொலை நெல்லைச் சீமையிலே நிகழ்த்தப்பட்டது. நிகழ்த்தப்பட்ட இடம் நத்தக் கோட்டை . வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்த்தால் சற்றுக் கலங்கலாக தெரியும் ஒரு பாளையம் தான் நத்தக் கோட்டை .
நத்தக் கோட்டை . நெல்லைச் சீமையிலே பாளையங்கோட்டையிலிருந்து சுமார் 36 மைல் தொலைவு தென் மேற்கேயும் , ஆரல்வாய்மொழியிலிருந்து சுமார் 6 மைல் கிழக்கேயும் அமைந்த ஒரு சிறு பாளையம்.
ஆர்க்காடு நவாபிடம் பெற்ற உரிமையின் காரணமாக பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை கும்பினியார் பெறுகின்றனர். பல பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்ய முற்பட்டனர். இந்தச் சூழலில் 20-1-1754 அன்று தஞ்சையிலிருந்து இராமன் நாயக் என்பவன் சென்னை கோட்டைக்கு ஒரு மடல் எழுதுகிறான், " மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் தற்போது அறுவடைக் காலம் தொடங்குகிறது. நம் படைகளை அனுப்பினால் ஏராளமாக வசூல் வரும். தவறினால் மேலும் அடுத்த ஆண்டு வரை தாமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு எழுதுகிறான். கும்பினி மேலிடம் கர்னல் அலெக்சாண்டர் ஹெரானையும், முகமதலியின் மூத்த சகோதரன் மாபூஸ்கானையும் வரி வசூல் செய்ய அனுப்புகின்றனர். இவர்கள் தலைமையில் கும்பினி படை தெற்குச் சீமை நோக்கி புறப்பட்டது.
மதுரை வந்த ஹெரானும் - மாபூஸ் கானும் படைகளுடன் நெல்லை நோக்கி பயணமாகின்றனர். சில பாளையங்கள் பணிந்து விடுகின்றன. பணியாத பாளையங்களின் மேல் படையெடுக்க ஆயத்தமடைகின்றனர். அதற்குள் ஹெரானை திருச்சிக்கு புறப்பட்டு வருமாறு மேலிடத்தால்ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால் ஹெரான், வரி வசூல் செய்ய கேப்டன் பீவர் (Beaver) தலைமையில் 100 வெள்ளையர்கள், 300 சிப்பாய்கள் மற்றும் இரண்டு பீரங்கிகளுடன் நத்தக் கோட்டைக்கு அனுப்பி வைக்கிறான்.
பீவரின் படை 18 மணி நேர பயணத்திற்குப் பிறகு நத்தக் கோட்டை வந்து சேர்கிறது . இதனை எதிர்பார்க்காத நத்தக் கோட்டை பாளையக்காரர் தூதுவரை அனுப்பி சமாதானத்திற்கு முற்படுகிறார். வெள்ளையர் இதனை ஏற்காமல் தூது வந்த தூதுவனை சிறைப்பிடித்து விடுகின்றனர். கேட்ட தொகையை கொடுத்தால் தான் பிணைக்கைதியான தூதுவனை விட முடியும் என்று சொல்லி விடுகிறார்கள்.
கும்பினி படை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தூதுவன் தப்பி அரண்மனைக்கு சென்று விடுகிறான்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கும்பினிப் படை நத்தக் கோட்டை மீது தாக்குதல் தொடுக்கிறது. வெள்ளையர் பட்டாளமும், நாட்டுச் சிப்பாய்களும் பல அணிகளாகச் சேர்ந்து அக்கோட்டை முழுவதும் நாசம் செய்தனர். ஆண், பெண், முதியவர், குழந்தைகள் என ஒரே மூச்சில் 394 பேரை படுகொலை செய்து முடித்தனர். அதோடு ஆடு, மாடு, குதிரைகள் போன்ற விலங்குகளையும் வெட்டிச் சாய்த்தனர். அங்கிருந்த தானியங்களை கொள்ளையடித்தனர். இந்திய வரலாற்றில் வெள்ளையர் நடத்திய முதல் படுகொலை நத்தக் கோட்டைப் படுகொலை தான்.
இதைப் பற்றி இராபர்ட் ஆரம் (Robert Orme) தன்னுடைய History of Hindustan - 1861 என்ற நூலிலே எழுதுகிறார், " நாங்கள் வருந்துகிறோம். வருந்திக் கூறுகிறோம். இந்த முட்டாள்தனமான படுகொலைகள் புரிந்த படைகளும், அதிகாரிகளும் ஆங்கிலேயர்களே" என்றும் "கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்த வெறிக் கொடுமை" என்றும் பதிவு செய்கிறார்.
நண்பர்களே.'
வெள்ளையர் நடத்திய முதல் படுகொலையில் தப்பிய அறுவர் - அந்த நத்தக் கோட்டை வம்சாவளியினர் தப்பிச் சென்று கன்னியாகுமரி அருகிலுள்ள பஞ்சலிங்கபுரத்தில் வாழ்ந்து வருவதாக கால்டுவெல் கூறியுள்ளார்.
கோட்டைக்கருங்குளம்தான் பிரிட்டிஷ் ஆவணங்கள் குறிப்பிடும் நத்தக்கோட்டையாக இருக்கவேண்டும். நான் பஞ்சலிங்கபுரம் பகுதியில் களப்பணியாற்ற சிலரை ஒருவர் மூலமாக அனுப்பினேன். அங்கே அவர்கள் அளித்த தகவலின்படி பலர் தங்களது பகுதி சிங்கம்பட்டி ஜமீன் பகுதி என்கிறார்கள். கோட்டைக்கருங்குளம் ஊரினர் மிகுதியாக உள்ளனர். தப்பித்து சென்ற அறுவருடைய வம்சாவளியினரை கண்டறியும் முயற்சிகள் தொடர்கிறது
மறைக்கப்பட்ட எத்தனையோ வீர வரலாற்றில் நத்தக் கோட்டை படுகொலை முக்கியத்துவம் வாய்ந்தது.
...... மானமறவர்களின் வீரவரலாற்றைத் தேடுவோம்......
ஆதாரம் :
I. Country Correspondences military Dept. 1755 .
2. Dairy and consultation of public Dept. 1755
3 History of Tinnavely Dist. By Dr. Coldwell
4. History of Hindustan by Robert orme, 1861
5. திருநெல்வேலி சீமைச் சரித்திரம் - குரு குகதாசப் பிள்ளை
6. Vestiges of Madras Vol. II - H.D. Love, 1913
7. Tinnaveli Dist. gazetters by H.R. Pate. 1917.
நன்றி :
பேசும் ஆவணங்கள்
எம். செந்தூர பாண்டியன்
மருதுபாண்டியன் இரா.
வேரை இழந்த மரங்களின் கதை
வேரை மறந்த மரங்களின் கதை:1
-^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^- -^-
இது வரலாற்றில் தமது பட்டங்களாலும், பிரிவாலும், தனித்தன்மையாலும், உண்மை முகத்தை தொலைத்த இனங்களின் வரலாறாகும். இதை முகநூலில் தொடராக எழுத எண்ணியுள்ளேன். ஒவ்வொரு இனமாக அலசுவோம். இதன் மூலம் தமிழக சாதிகள் தமது பழைய வரலாற்றை மீட்டெடுக்க மற்றும் அவர்களது உண்மை உறவுச்சாதியினரை அடையாளங்காணும் முயற்சியே அன்றி வேறெந்த காழ்ப்புணர்வும், பிரித்தாளும் கொள்கையோ அல்ல என்பதை முகநூல் வாசகர்கள் உணர்க.
சவளைக்காரர்:
- - - - - - - - - - - - - -
பரதவரில் ஒரு பிரிவான சவளைக்காரர் என்போர். இன்று பெருவாரியாக தம்மை சிறிதும் தொடர்பற்ற பள்ளி-வன்னியர் இனக்குழுவில் தொடர்புற்றவர்களாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களின் சான்றுகள் பரவர் அல்லது பரதவர் எனும் மிகவும் பண்டைய தொல்குடி இனமாகிய திணைக்குடிகளின் வழியினராக சொல்கிறது. பரவரான இச் சாதியாருள் "வன்னியர்" என்பதும் ஒரு பட்டமாகும். இதை பிற்காலத்தில் "வன்னியர்" எனும் சாதிச்சான்றிதழ் பெற்ற ஒரு செயற்கையான குழுமத்தினர் சொல்லும் கதைகளை ஏற்றுக்கொண்ட 'அறிவுசாரா' சமூக மக்களின் அறியாமையால் தம்மை வன்னியன் என்றும், வன்னியகுல சத்திரியர் என்றும் எண்ணிக்கொண்டு தமது தாய்ச்சமூகமான பரதவரை விட்டு விலகிநிற்க ஆளாகின்றனர். கீழுள்ள சான்றுகள் எட்கர்தர்ஸ்டன் குறிப்புகளாகும்.
பரவர்-பரதவர் வெவ்வேறு அல்ல என்பதும் சவலைக்காரர் மற்றும் சலங்குகாரர் இருவரும் ஒத்த கூறுடையவர்கள் என்பதும் பரவரில் சவலைக்காரர் ஒரு வகையார் என்பதும் தெளிவு. எக்காலத்திலும் பள்ளி என்போர் பரவரிலோ, பரதவரிலோ,சவலைக்காரரிலோ வரவில்லை என்பதும் வன்னியர் என்றபெயர் பரவரான சவலைக்காரருக்கும் உண்டு என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெற்றென விளங்கும். இவர்கள் இன்று பா.ம.க. போன்ற கட்சிகளில் வன்னியர் எனும் பொதுப்பெயரால் இணைந்து தம் வேர்ச்சமூகத்தை அறியாமல் 'அக்னிகலச' குறியீட்டையும், அக்கட்சியின் கொடி வண்ணத்தை தமது சமூகத்தின் நிறமாகவும் எண்ணி வீணே மயங்குகின்றனர். மேலும் அறியாத சவளைக்காரர் பலரையும் படையாச்சி எனும் மற்றொரு பட்டங்கொண்டு நீவிர் பரதவரல்ல! , பரவரல்ல! , இன்னும் சவளைக்காரரே கூட அல்ல! , நீர் -வன்னியர், படையாச்சி என பட்டப்பெயரை சாதிப்பெயராக்கி சாதிக்கின்றனர்.
ஆகவே வேரை மறக்கும் மரங்கள் நாளடைவில் பட்டுப்போன வெறுங்கட்டைகளாகும். என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இதையறிந்தாவது இனி வேரை நோக்கிய உங்கள் கவனத்தை திருப்பி அதை நீர்விட்டு பராமரிக்க வேண்டிய கடமை சவளைக்காரர் இனத்தவர்கள் செய்யவேண்டிய பணியாகும்.
நாளை மற்றொரு வேரிழந்த மரத்தைப்பார்ப்போம்! -தொடரும்!
அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்
'""""""""""""""""
Friday, July 28, 2017
நாம்-முக்குலத்தோர் !
நாம் முக்குலத்தோர்
¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤
இன்று எங்கு பார்க்கினும் முக்குலத்தோர் எனும் சொல்லும், தேவர் எனும் சொல்லும் பல இனத்தவர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது. ஏன் முக்குலத்தாராலேயே கூட அது விமர்சிக்கப்படுகிறது. இணையவெளியில் உள்ளோரில் பொதுப்புத்தியில் சிந்திப்பவர்கள் இதை கண்டுகொள்வது கிடையாது. ஆனால் முக்குலத்தோர் எனும் மூன்று குழுக்களின் பலமானது இந்த ஒருங்கிணைப்பில்தான் இருக்கிறது என்று கருதும் சிலர், அதை உடைக்க படாதபாடு படுகிறார்கள்.இதையே முழுநேர பணியாக "அகமுடையார் ஒற்றுமை. காம்". எனும் தளம் இதைப்பரப்பிக்கொண்டு வருகிறது. இவர்களின் கூற்று என்னவென்றால். ..
1."முக்குலத்தோர்" என்பது போலியானது.
2. கள்ளர் -மறவர் -அகமுடையார் வெவ்வேறு இனத்தவர்கள்.
3. முக்குலத்தோர் என்பது 1933 க்கு பிறகு அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்டது.
4. கள்ளர் -மறவரால் அகமுடையார்க்கு ஒருபலனும் இல்லை.
- இப்படியான சில காரணங்களை எப்போதும் சொல்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் உண்மையா? எப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு இதுவரையிலும் எந்த பிரிவினைவாதிகளாலும் ஒரு உறுப்படியான, தெளிவான, அறம்சார்ந்த, நியாயமான, பளிச்சென்று நல்ல பதிலை சொல்ல முடியவே இல்லை. இவர்களிடம் சென்று நாமெல்லாம் ஒன்று என எவராவது பின்னூட்டமிட்டால் அவ்வளவுதான்.
"ஏதோ அடுப்பில் எரியும் நெருப்பு "இடுப்புக்கு" கீழ் பிடித்துவிட்டதைப்போன்று புழுவாய் துடித்துப்போவார்கள்". நியாயமான பதிலை சொல்லத்தான் நினைப்பார்கள். ஆனால் சிந்தித்துப் பார்த்து அப்படி ஏதும் கிடைக்காமல், என்ன சொல்வது என்றும் தெரியாமல் மூன்று குழுக்களின் ஏதாவது ஒரு குறையை, திரும்பத் திரும்பச்சொல்லி "உள்ளூர குரூரமாக " எக்களித்துக்கொள்வார்கள். எங்கள் மருத்துவ உலகில் இப்படிப்பட்டவர்களை குறிக்க "சைக்கோ" என்போம். இந்த "மேனியா" மேனியில் ஏறிவிட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கீழிறங்காது. இவர்கள் தலையில் ஒரு டன் எலுமிச்சை பழத்தை அரக்கித்தேய்த்து குற்றாலத்தில் குளிப்பாட்டினாலும் அந்நோய் தீராப்பிணியாகவே தொடர்ந்து பின்வரும். இருப்பினும் மருந்தளிக்க வேண்டியது ஒரு வைத்தியனின் கடமை என்பதைப்போல, சான்றுகளை காட்டி நாம் அப்பிணி தீர்க்கும் மருத்துவனாக செயல்படுவோம்.
முக்குலத்தோர் மூவரும் வெவ்வேறு இனத்தவரா? என்றால்.... சான்றுகள் ஒன்று என்றுதான் சொல்கிறது. எப்படி?
ஆங்கிலேயரில் இனவரைவியல் ஆய்வாளரான திரு.எட்கர்தர்ஸ்டன். , நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மக்களின் சாதிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்ற நூலை பல தொகுப்புகளாக வெளியிட்டார். அவற்றில் கள்ளர் -மறவர் -அகமுடையார் பற்றியும் ஆய்வுக்குறிப்புகளை எழுதியுள்ளார்.
அகமுடையார் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
"அகம்படியன் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்று பொருள். அவர்கள் அரசரின் அரண்மணைகளில் அல்லது கோயில்களில் வேலைபுரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் 'தெற்கத்தியார்" எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக்காரர். "கள்ளர் -மறவர் -அகம்படியர்" என்னும் மூன்று வகுப்பினருக்கிடையே திருமணக்கலப்பு உண்டு. மறவ-அகம்படிய திருமணக்கலப்பினால் தோன்றியோர் அகமுடையர் என்று சொல்லப்படுகிறது " - என்கிறார்.
கள்ளர் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
"கள்ளரில் தலைமைக்காரர் அம்பலக்காரர் எனப்படுவார்."
"கள்ளரில் 'தெற்கத்தியார்' எனப்படுவோர் புதுக்கோட்டையில் காணப்படுகின்றனர்."
"தஞ்சாவூரில் உள்ள கள்ளருக்கு 'மறவன்' 'அகமுடையான்' முதலிய பெயர்கள் வழங்கப்படுகிறது.
"கள்ளன்,மறவன், அகமுடையான்: மூவருக்கும் நெருங்கிய உறவுண்டு "
"கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் 'அம்பலக்காரன்" அவரில்சிலர் "அகமுடையான்" சேர்வை' "தேவன்' எனவும் பெயர் பெறுவர். - என்றார்.
மறவர் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
"கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர் "
"ராமநாதபுரத்து செம்பியநாட்டு மறவர், அகம்படியாரைத் தமது வர்க்கமாக கருதுவர் "
"மறவருக்கு அகம்படியானே கொள்ளிக்குடம் சுமந்து சுடலைக்கு கொண்டு செல்வான் "
" மறவரின் பட்டப்பெயர். தேவன் -தலைவன்-ராயன்-கரையாளன் -ராஜன் என்பன"
- என்கிறார்.
பரிவாரம்
- - - - - - - - -
இதுவும் போக அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று முக்குலத்தோரிலும் கரைந்துபோன "பரிவாரம்" எனும் பணியாளர்களையும் அவர் ஆய்ந்துள்ளார்.
"பரிவாரத்தில் மறவர் -அகம்படியாருள் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் 'சின்ன ஊழியம்' 'பெரிய ஊழியம்' என இருவகையினர் என்கிறார்.
மேற்கண்டவற்றிலிருந்து நற்சிந்தனையுடையோர் அறியும் செய்தி என்னவென்றால் " முக்குலத்தோர்" என்பது வெறும் வாய்பேச்சுக்கான -அரசியலுக்கான - மூவரில் ஒருகுழுவின்சுயநலத்திற்கான கட்டமைப்போ அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அமைப்போ அல்ல, என தெளிவாக உணரலாம்.
-தொடரும்!.....
- அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்
Thursday, May 4, 2017
ஊத்துமலை வம்சாவளியும், அதன் உண்மைகளும்!
ஊத்துமலை ஜமீன் வம்சாவளி
""""""""""""""""""""""""""""""""""""""""""""
வரலாறு சொல்லும் உண்மைகள் !!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் வம்சாவளி என்னதான் சொல்கிறது? .... இதை வைத்துக் கொண்டு முக்குலத்தோர் வரலாறை குறை சொல்வது எத்தகையதாகும்?
இந்த வம்சாவளி வரலாறு பல்வேறு சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறது! ... ஊத்துமலை என்பது நாயக்கர் அளித்த பாளையம் அல்ல என்பதும், அது பாண்டியர் அளித்த பாளையம் என்பதும், ஊத்துமலை பாளையத்திற்கு முன்பே திருச்சுழி, பள்ளி மடம் முதலிய சீமையை ஆண்டவர்கள் தென்பகுதியில் பாண்டியர் கரத்தை வலுப்படுத்த வந்து பாளையத்தை ஏற்படுத்திகொண்டனர் என்பதும் தெளிவாகிறது!
.. இனி பாண்டியனுக்கு பெண் தரவில்லை என்பதை வைத்து மறவர் பாண்டியரல்ல என வாதிடுவோர் கீழே உள்ள வம்சாவளி விளக்கம் படித்து விட்டு கேட்கட்டும் பெண் கேட்ட பாண்டியன் தூதரை பார்த்து "விஜய வரகுண மருதப்ப பாண்டியன்" கேட்ட கேள்விகளுடன் உள்ளிட்ட உரையில் இவ்விதமாக விளக்கம் வருகிறது! ...
"கொற்றவன் தன் திரு முகத்தை
கொணர்ந்த தூதா!..
குறையுடலுக்கோ மறவர் கொம்பை ? (குறையுள்ள உங்களுக்கா மறவர் மகள்? ) கோட்டயம் அற்றவர் சேர்! கோட்டை கொத்தளம் இல்லாதவர்களிடம் சென்று கேள்!திருவரங்கப் பெருமான் தோழன் (திருமங்கையாழ்வார் ) அவதரித்த திருக்குலமென்று உங்கள் மன்னர் அறியார் போல! நீ கொண்டு வந்த இந்த ஓலையின் பெயர் திருமுகமா? இதற்கு நாக்கு, வாய், செவி, கண், மூக்கு எங்கே இருக்கிறது? மன்னர் மன்னன் பெற்ற இளவரசனானாலும் இந்த பெண் பிறந்த மறக்குலத்திற்கு ஏற்ப பேசுடா!
இனி கீழ் உள்ள வசனம்! ...
பேச வந்த தூதா! .. சன்னத்த (சிறிய ) ஓலை பேசுமோ? .. பெரு அங்க இருவ அங்கு ... (இப்பகுதி குழப்பமாக உள்ளது ) பிள்ளை கேட்கிறீர்களே! ... பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து நாங்கள் கொடுத்தால்! .? பட்டமன்னர் ( மன்னர் இறந்தால் ) பட்ட தங்கள் தீய்ப்புகுந்து (உடன்கட்டை ஏறி ) பாராட வாசலுக்கு சுடும்படா? ( உங்கள் உறவு பாராட்டிய எங்கள் வாசலில் சுடுமடா) கவித்து வந்த கவிகை மாங்கிட கொடிதனை ( துள்ளி விளையாடும் மானாகிய எங்கள் பெண்ணுடைய காலும் ) நாளியும் வீசுஞ் சாமரம் போன்ற கற்றைசுற்றிலே( வீசும் கூந்தல் ) வேலியிட்டது போல வில்லும், வாளும், வேலும் சுற்றி அடைத்துக்கொள்ளும் , அரவர் (நாகர் புகலிடமாக சேர்ந்த ) புகள் மதுரை அம்பலவாணன் அவன் உறவை பெறுவதற்காக உங்களுக்கு நாங்கள் அடுமையுற்றோமா? (அடிமைப்பட்டோமா?) வரினக்குப்பத்துண்டா பெண்ணென்று சொல்லும் வேந்தன், தனக்கு பத்துண்டா தலை மறுக்குந்தான் கேட்ட வாமா? (வாமனன்?) மரைக்காட்டீசன் தீந்த தில்லை திருமகன் அன்றி பிறந்தவன்(சிவன் கூட பெண் தந்ததில்லை பெருமாளுக்கு அன்றி ) இக்காப்பானும் பெண் தருக என்றான்! .. இது இப்படியே போனால் ஒரு பாப்பான் கூட கேப்பான் போலயே? கொடுத்தோம் ஆனால் நடந்தது என்ன? இத்தல துயில் கொண்டு பாதி வனத்தில் போக விட்டார்கள்! ( சீதை? ) வெண்சிறை புக நின்றார்கள்????. துகிலுரிய விட்டு கேட்டனர் ( திரௌபதி துகிலுரி சம்பவம் ) உத்த தாரம் விரும்பி (தனக்கு ஏற்ற பெண்ணை விரும்பி) இன்னும் மன்னர் பெண் கட்ட விருப்பம் இருக்கிறதோ ?... உமியடா (போய் காறித்துப்புடா உங்க ராசா மூஞ்சிய ) மண் மென்று வாய் கிழி (மண் திங்க வைத்து அவன் வாயக்கிழி! பயபுள்ள யார்ட்ட கேக்கான் பொண்ண?) ஓலையை கரத்தில் உருட்டி செல்! அத்த நாள் வரை காத்தவாயுகளை பெற்றிடும் ........ ..
இப்படி சொல்லிக்கொண்டே போகிறது ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் வம்சாவளி. ..
இதில் மறக்குல நாச்சியார்களாக முறையே சீதை, திரௌபதி , வள்ளி எனப்பலரையும் இந்த கைபீது சொல்கிறது! வள்ளி குறத்தி என சொல்பவர்கள் .... சீதையும், திரௌபதியும் எக்குலமென்று சொல்வீர்களாக.... ,
பாண்டியனின் குலம் "மச்சம்" (மீன்) அதை தனக்குரியதாக சொல்கிறார் மருதப்பபாண்டியன். இங்கு பெண் கேட்ட பாண்டியன் என்று வருபவரை "சூரிய குலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று எடுத்துக்கொள்வது ? இங்கே அப்பொழுது மதுரை ஆண்ட பாண்டியர் ஒன்று சோழ பாண்டியராக இருக்க வேண்டும் அல்லது சேதுபதி மன்னர்களாக இருக்க வேண்டும்! ஆதலால் தன் வம்சமல்லாதார்க்கு பெண் கொடுப்பது இல்லை என்கிறார்! . இதை வைத்து மறவர் பாண்டியர் அல்ல என்பது எவ்வளவு மூடத்தனம்? .
மறவர் பாண்டியரே என்பது நிரூபணமான வரலாறு. அது மட்டுமின்றி இதே வம்சாவளியில் மறவர்களை மீனாக்ஷியின் புத்திரர்கள் எனவும் மறவரின் தோற்றம் விளக்கப்படுகிறது. கீழ் வருபவனவற்றிலிருந்து அதை அறியலாம்.,..
மலையத்துவஜபாண்டியனின் மகள் பார்வதிதேவியின் அம்சமான "தடாதகைப்பிராட்டியான மீனாக்ஷி தனது விலாப்புறத்தில் இருந்து மறவர்களைத்தோற்றுவித்தாளென்றும், வீரத்திற்காக பிறந்ததால் மறவரென்றும், பாண்டியகுலத்தினின்று உதித்தத காரணத்தால் "தேவன் " எனவும் வழங்கப்படுவீர்கள் என்றும் சொல்கிறது! இதிலிருந்தே மறவர்தான் பாண்டியர் குலம் என அறியப்படுகின்றனர்.
மேலும், கள்ளர் குலத்தவரான திருமங்கை ஆழ்வாரையும்,கண்ணப்ப நாயனாரையும் தமது குல முன்னோர்களாக சொல்கிறார். . சிலர் இதைவைத்து கண்ணப்பநாயனார் குலம் என்று குறிப்பிடுவதால் மறவர் சத்திரியர் அல்ல என வாதிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி!
மலையத்துவஜபாண்டியனின் மகள் சூத்திர குலமா? மச்சவம்சம் சூத்திரகுலமா? மறவரில் கிளை வழியுடைய கொண்டையன்கோட்டையினர் மட்டுமே தாய்வழிச்சமூகம், அதனால் தடாதகைப்பிராட்டியான பார்வதிதேவியின் புத்திரர்கள் சூத்திரரா?
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மாற்று சாதி நண்பர்களே முக்குலத்தோர் சத்திரியப்பட்டத்திற்கு ஆசைப்பட்டதுமில்லை! அதற்காக எந்த கோர்ட்டிற்கும் சென்றதுமில்லை! எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கே தெரியும் யார் சத்திரியரென்று!.. சோழர் காலத்தில் தோன்றிய நால்வருணப்பாகுபாடு முக்குலத்தோரை எந்த விதத்திலும் பாதிக்காது. எங்களுக்கு மூவேந்தரில் இருந்து பிற்கால பாளையங்கள், சமஸ்தானங்கள் வரை ஆண்ட வரலாறு உள்ளது. ஆங்கிலேயர்கள் கூட தமிழகத்தில் முக்குலத்தோரையும், கேரளாவில் நாயரையும் தவிர எவரையும் இயல்பான சத்திரியர் என்று ஏற்கவில்லை! இதற்கு அவர்களே எழுதிய ஆவணங்களும் சாட்சியங்களாக இருக்கின்றன.