Friday, July 28, 2017

நாம்-முக்குலத்தோர் !

நாம் முக்குலத்தோர்
¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤
    இன்று எங்கு பார்க்கினும்  முக்குலத்தோர் எனும் சொல்லும், தேவர் எனும் சொல்லும் பல இனத்தவர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது. ஏன் முக்குலத்தாராலேயே கூட அது விமர்சிக்கப்படுகிறது.  இணையவெளியில் உள்ளோரில் பொதுப்புத்தியில் சிந்திப்பவர்கள் இதை கண்டுகொள்வது கிடையாது. ஆனால் முக்குலத்தோர் எனும் மூன்று குழுக்களின் பலமானது இந்த ஒருங்கிணைப்பில்தான் இருக்கிறது என்று கருதும் சிலர், அதை உடைக்க படாதபாடு படுகிறார்கள்.இதையே முழுநேர பணியாக "அகமுடையார் ஒற்றுமை. காம்".   எனும் தளம் இதைப்பரப்பிக்கொண்டு வருகிறது.  இவர்களின் கூற்று என்னவென்றால். ..

1."முக்குலத்தோர்" என்பது போலியானது.

2. கள்ளர் -மறவர் -அகமுடையார் வெவ்வேறு இனத்தவர்கள்.

3. முக்குலத்தோர் என்பது 1933 க்கு பிறகு அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்டது.

4. கள்ளர் -மறவரால் அகமுடையார்க்கு  ஒருபலனும் இல்லை.

           - இப்படியான சில காரணங்களை எப்போதும் சொல்கிறார்கள்.  ஆனால் இவையெல்லாம் உண்மையா?  எப்படி சொல்கிறீர்கள்?  என்று கேட்டால் அதற்கு இதுவரையிலும் எந்த பிரிவினைவாதிகளாலும் ஒரு உறுப்படியான, தெளிவான, அறம்சார்ந்த, நியாயமான, பளிச்சென்று நல்ல பதிலை சொல்ல முடியவே இல்லை. இவர்களிடம் சென்று நாமெல்லாம் ஒன்று என எவராவது பின்னூட்டமிட்டால் அவ்வளவுதான். 
"ஏதோ அடுப்பில் எரியும் நெருப்பு "இடுப்புக்கு" கீழ் பிடித்துவிட்டதைப்போன்று புழுவாய் துடித்துப்போவார்கள்".  நியாயமான பதிலை சொல்லத்தான் நினைப்பார்கள். ஆனால் சிந்தித்துப் பார்த்து அப்படி ஏதும் கிடைக்காமல், என்ன சொல்வது என்றும் தெரியாமல் மூன்று குழுக்களின் ஏதாவது ஒரு குறையை, திரும்பத் திரும்பச்சொல்லி "உள்ளூர குரூரமாக " எக்களித்துக்கொள்வார்கள்.  எங்கள் மருத்துவ உலகில் இப்படிப்பட்டவர்களை குறிக்க "சைக்கோ"  என்போம். இந்த "மேனியா" மேனியில் ஏறிவிட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கீழிறங்காது. இவர்கள் தலையில் ஒரு டன் எலுமிச்சை பழத்தை அரக்கித்தேய்த்து குற்றாலத்தில் குளிப்பாட்டினாலும் அந்நோய் தீராப்பிணியாகவே தொடர்ந்து பின்வரும்.  இருப்பினும் மருந்தளிக்க வேண்டியது ஒரு வைத்தியனின் கடமை என்பதைப்போல, சான்றுகளை காட்டி நாம் அப்பிணி தீர்க்கும் மருத்துவனாக  செயல்படுவோம்.

முக்குலத்தோர் மூவரும் வெவ்வேறு இனத்தவரா? என்றால்.... சான்றுகள் ஒன்று என்றுதான் சொல்கிறது. எப்படி?

ஆங்கிலேயரில் இனவரைவியல் ஆய்வாளரான திரு.எட்கர்தர்ஸ்டன். ,  நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மக்களின் சாதிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்ற நூலை பல தொகுப்புகளாக வெளியிட்டார்.  அவற்றில் கள்ளர் -மறவர் -அகமுடையார் பற்றியும் ஆய்வுக்குறிப்புகளை எழுதியுள்ளார். 

அகமுடையார் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

"அகம்படியன் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்று பொருள். அவர்கள் அரசரின் அரண்மணைகளில் அல்லது கோயில்களில் வேலைபுரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் 'தெற்கத்தியார்" எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக்காரர்.  "கள்ளர் -மறவர் -அகம்படியர்" என்னும் மூன்று வகுப்பினருக்கிடையே திருமணக்கலப்பு உண்டு. மறவ-அகம்படிய திருமணக்கலப்பினால் தோன்றியோர் அகமுடையர் என்று சொல்லப்படுகிறது " - என்கிறார். 

கள்ளர் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

   "கள்ளரில் தலைமைக்காரர் அம்பலக்காரர் எனப்படுவார்."

"கள்ளரில் 'தெற்கத்தியார்' எனப்படுவோர் புதுக்கோட்டையில் காணப்படுகின்றனர்."

"தஞ்சாவூரில் உள்ள கள்ளருக்கு 'மறவன்' 'அகமுடையான்' முதலிய பெயர்கள் வழங்கப்படுகிறது.

"கள்ளன்,மறவன், அகமுடையான்: மூவருக்கும் நெருங்கிய உறவுண்டு "

"கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் 'அம்பலக்காரன்"  அவரில்சிலர்  "அகமுடையான்" சேர்வை' "தேவன்' எனவும் பெயர் பெறுவர்.   - என்றார்.

மறவர் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -

"கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர் "

"ராமநாதபுரத்து செம்பியநாட்டு மறவர், அகம்படியாரைத் தமது வர்க்கமாக கருதுவர் "

"மறவருக்கு அகம்படியானே கொள்ளிக்குடம் சுமந்து சுடலைக்கு கொண்டு செல்வான் "

" மறவரின் பட்டப்பெயர். தேவன் -தலைவன்-ராயன்-கரையாளன் -ராஜன் என்பன"
             - என்கிறார்.

பரிவாரம்
- - - - - - - - -
இதுவும் போக அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று முக்குலத்தோரிலும் கரைந்துபோன "பரிவாரம்" எனும் பணியாளர்களையும் அவர்  ஆய்ந்துள்ளார். 

"பரிவாரத்தில் மறவர் -அகம்படியாருள் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் 'சின்ன ஊழியம்' 'பெரிய ஊழியம்' என இருவகையினர் என்கிறார். 

மேற்கண்டவற்றிலிருந்து நற்சிந்தனையுடையோர் அறியும் செய்தி என்னவென்றால் " முக்குலத்தோர்" என்பது வெறும் வாய்பேச்சுக்கான -அரசியலுக்கான - மூவரில் ஒருகுழுவின்சுயநலத்திற்கான கட்டமைப்போ அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அமைப்போ அல்ல, என தெளிவாக உணரலாம்.

      -தொடரும்!.....

    - அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்